மணலைச் சோறாக்கிய பெண்மணி!
ADDED :4149 days ago
வள்ளுவரின் மனைவி வாசுகியின் தந்தை மார்க்கசகாயம். இவர், தன் மகளை திருவள்ளுவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். திரு மணத்துக்கு முன் பெண் பார்க்கச் சென்று, அந்தக் காலத்திலேயே புரட்சி செய்தவர் வள்ளுவர். அவர், தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் குணநலன்களைப் பரிசோதித்து தெரிந்து கொள்ள நினைத்தார். மார்க்கசகாயத்திடம் ஒரு பிடி மணலைக் கையில் கொடுத்தார். “இந்த மணலை உங்கள் மகளிடம் கொடுங்கள். அவள் இதை சமைத்து சோறாக்கினால், உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்கிறேன்,” என்றார். வாசுகி சற்றும் தய ங்கவில்லை. மணலைச் சமைத்தார். சோறாக மாறியது. இதுகண்டு ஆச்சரியப்பட்ட வள்ளுவர், அவளது கற்புத்திறன் மற்றும் நம்பிக்கை கண்டு, அந்த அம்மையாரையே திருமணம் செய்து கொண்டார்.