அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் யாக பூஜை!
ADDED :4010 days ago
தர்மபுரி: அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், யாகபூஜை விழா, நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில், யாக பூஜை விழா, நேற்று நடந்தது. காலை, 6.30 மணிக்கு, கணபதி ஹோமம், கோபூஜை, அஷ்ட பைரவ ஹோமம், அஸ்வ குதிரை பூஜை நடந்தது.
தொடர்ந்து, காலை, 10 மணிக்கு, 64 வகையான அபிஷேகம், 108 அர்ச்சனை நடந்தது. இரவு, 10.30 மணிக்கு சத்ரு சம்ஹர ஹோமம் குருதி பூஜை, 508 கிலோ மிளகாய், 508 கிலோ மிளகு பூஜை நடந்தது. பூஜைகளை, சென்றாய பெருமாள் சோமேஸ்வரர் திருக்கோவில் வகையறா குருக்கள் கிருபாகரன் செய்திருந்தார்.