தலைக்காவிரியில் இன்று தீர்த்த உற்சவம்!
ADDED :4010 days ago
பெங்களூரு : காவிரியின் பிறப்பிடமான, குடகு மாவட்டம், தலைக்காவிரியில், தீர்த்த உற்சவம், இன்று நடக்கவுள்ளது. இன்று மாலை, 6:07 மணிக்கு, மீன லக்னத்தில், புனித காவிரி, தீர்த்த உற்சவம் நடக்கிறது. இதை பார்க்க, லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். தீர்த்த உற்சவம், இந்த முறை மாலையில் நடப்பதால், போதிய பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.