புராதனமான சரவணப்பொய்கை: ரூ.ஒரு கோடியில் சீரமைப்பு!
ADDED :4010 days ago
மதுரை : தமிழகத்தில் புராதன நகரங்களை மேம்படுத்தும் திட்டத்தில் திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் 15 புராதன நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.ஒரு கோடியில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்தது. அதன் படி நகர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சரவணப் பொய்கை தேர்வு செய்யப்பட்டது.அங்கு பணிகள் மேற்கொள்வது குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்புமாறு நகர் மற்றும் ஊரக மேம்பாட்டு துறை சார்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில் சரவண பொய்கை பகுதியில் குடிநீர், சிமென்ட் கல்தளம், மின்விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.