சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை!
ADDED :4011 days ago
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் லட்சார்ச்சனை விழா நடந்தது. அதிகாலை தீர்த்தக்கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு மூலவரான சொக்கலிங்கேஸ்வரருக்கும், மீனாட்சிக்கும் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. தலைமை அர்ச்சகர் திருஞானசம்பந்தம் தலைமையில், காலை 7.00 மணிக்கு துவங்கிய லட்சார்ச்சனை இரவு 8.00 மணி நீடித்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறங்காவலர் சுந்தரம் தலைமையில், திருவருள் தவநெறி மன்றத்தினர் செய்தனர்.