உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா!

வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா!

செக்கானுாரணி : செக்கானுாரணி அருகே கே.புளியங்குளம் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. தேன்கல்பட்டி, மாயாண்டிபட்டி பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள், மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் அச்சு வெல்லம், வாழைப்பழங்களை பொதுமக்கள் மீது வாரி இறைக்கப்பட்டது. பின்னர் கே.புளியங்குளம் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !