விழுப்புரம் ஆஞ்சநேயருக்கு வழிபாடு!
ADDED :4010 days ago
விழுப்புரம்: விழுப்புரம் விஸ்வரூப ஆஞ்சநேருக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெ., விடுதலை பெறக்கோரி விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். மாஜி முதல்வர் ஜெ., சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற கோரி அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் தாட்கோ கண்ணன் தலைமையில் பேரவை செயலாளர் பாலசுந்தரம், அரசு வழக்கறிஞர் பொன்சிவா, மருத்துவரணி மாவட்ட தலைவர் கலைசெல்வன், துணை தலைவர் தம்பி துரை, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் குமரேசன், அண்ணா தொழிற்சங்கம் திருநாவுக்கரசு கலந்து கொண்டு, பிரார்த்தனை செய்தனர்.