உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாள் கோவிலில் மகா சாந்தி ஹோமம்!

சரநாராயண பெருமாள் கோவிலில் மகா சாந்தி ஹோமம்!

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி,  மூலவர் பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று புரட்டாசி மாத நிறைவையொட்டி, காலை 6:00 சுப்ரபாதம், கோபூஜை, 7:30 மணிக்கு தோமாலை சேவை, உலகம் நன்மை பெற  வேண்டி காலை 10:00 மணிக்கு மகாசாந்தி  ஹோமம் துவங்கி, 12:00 மணியளவில் நிறைவு பெற்றது. சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமிகள், ஏழு பட்டாச்சாரியார்கள் ஹோமம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !