உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ராமகிருஷ்ண மடத்தில் அகில இந்திய குறும்படப் போட்டி!

சென்னை ராமகிருஷ்ண மடத்தில் அகில இந்திய குறும்படப் போட்டி!

சென்னை: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12, 1985-ம் வருடம் மத்திய அரசால் தேசிய இளைஞர் தினமாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம் அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. வருகிற 2015ம் ஆண்டு சுவாமிஜியின் வீரமொழிகளின் அடிப்படையில் ஒரு குறும்படப் போட்டியை நடத்த சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம் திட்டமிட்டிருக்கிறது.

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளின்படி குறும்படத்திற்கான  தலைப்புகள்:

வலிமை:

1. தீமைகளை எதிர்த்து நில்!
2. வலிமையூட்டும் ஒவ்வொரு கருத்தையும் கிரகித்துக் கொள்ளுங்கள். பலவீனப்படுத்தும் ஒவ்வொரு எண்ணத்தையும் விலக்கிவிடுங்கள்.

மனிதர்களை உருவாக்குதல்:

3. ஆயிரம் தடைகள் வந்தாலும் குணநலனில் நிலைபெற வேண்டும்.
4. எஜமானன் போல் வேலை செய்; அடிமைபோல் அல்ல!

தேசத்தை உருவாக்குதல்:

5. துறவும் தொண்டும் இந்தியாவின் தேசிய லட்சியங்கள். இந்தப் பாதைகளில் பாரதத்தை இணைத்தால் மற்றவை தாமாகவே சரியாகும்.
6. பெண் குலம் சிறக்காமல் உலகிற்கு நல்ல காலமில்லை. ஒரே இறக்கையுடன் எந்தப் பறவையும் பறக்க முடியாது.

இந்தத் தலைப்புகளைத் தவிர இன்றைய சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் வகையில் சுவாமி விவேகானந்தரின் எந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலும் குறும்படத்தைத் தயாரித்து அனுப்பலாம்.

சிறந்த ஆறு குறும்படங்களுக்கு ரொக்கப் பரிசுகள்!
நுழைவுக் கட்டணம் ரூ. 100/-
குறும்படத்தின் நேரம் 3-8 நிமிடங்கள், ஏஈ தரத்தில்
தமிழ்/இந்தி/ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறும்படம் அமையலாம். மௌனப் படமாகவும் இருக்கலாம்.
மற்ற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு துணைத் தலைப்புகள் ஆங்கிலத்தில் தரப்பட வேண்டும்.
போட்டிக்கான குறும்படங்கள் சுய சிந்தனையின் அடிப்படையில் படைப்பாற்றலுடன் இருக்க வேண்டும்.

முதல் பரிசு ரூ. 1,00,000/-
இரண்டு இரண்டாவது பரிசுகள் ரூ. 75,000/-
மூன்று மூன்றாம் பரிசுகள் ரூ. 50,000/-

குறும்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.12.2014

தொடர்பு முகவரி :

ஸ்ரீராமகிருஷ்ண மடம், 31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், 98407 86029, 82208 22026


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !