உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கா ஸ்நானம் ஏன்?

கங்கா ஸ்நானம் ஏன்?

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நீரை கொதிக்க வைத்து விடுகிறோம். தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. அன்றைய தினத்தில் நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய்தலையைக் கண்டால் அபசகுனம் என்பார்கள். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்றஐதீகம் இருக்கிறது. அதுபோல நம் வீட்டிலிருக்கும் தண்ணீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்தபுண்ணியம் கிடைக்கும். இதனால் தான் தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்று சொல்கிறார்கள். முற்றும் துறந்த துறவிகளுக்கும் கூட அன்று எண்ணெய் குளியல் உண்டு. கங்கா ஸ்நானத்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !