உடை அணியப் போகிறீர்களா?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புதிய ஆடை ஒன்றை அணியும் போது அதன் பெயரைக்கூறி,அல்லாஹ்வே! நன்றியனைத்தும் உனக்கே! நீயே இதனை எனக்கு அணிவித்தாய்! நான் உன்னிடம் இதன் நன்மையை (எனக்கு அளிக்கும்படி) கேட்கின்றேன். மேலும் எந்த நோக்கத்திற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறதோ அதன் நன்மையான அம்சத்தைக் கோருகிறேன். இந்த ஆடையின் தீமையை விட்டும் இது எந்த நோக்கத்திற்காக தயாரிக்கப் பட்டதோ, அதன் தீமையான அம்சத்தை விட்டும் உன்பாதுகாப்பில் என்னை நான்ஒப்படைக்கின்றேன், என்பார்கள்.இதன் விளக்கத்தைக் கேளுங்கள்.ஆடையானாலும் சரி, அல்லது வேறொரு பொருளானாலும் சரி அதனைத் தீமைக்கும் பயன்படுத்தலாம், நன்மைக்கும் பயன்படுத்தலாம். ஓர் இறைவன் நம்பிக்கையாளன் ஆடையை இறைவனின் வெகுமதியாகக்கருதுகிறான். மேலும், இந்தக் கொடை அவனுக்கு கிடைத்ததை குறித்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான்.மேலும், இறைவனிடம் இவ்வாறு இறைஞ்சுகின்றான்:நான் இந்த அருட்கொடையைப் பயன்படுத்தும்போது தீய செயல் செய்துவிடக் கூடாது. எந்தத் தீய நோக்கத்திற்காகவும் இதனை பயன்படுத்தி விடக்கூடாது. மாறாக, இதனை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும் நற்பேறு எனக்குக் கிடைக்க வேண்டும்,. அவன் இந்த பாணியில் சிந்திப்பது வெறும் ஆடையைப் பொறுத்தமட்டிலுமல்ல, ஒவ்வொரு அருட்கொடையையும் பெற்று இவ்வாறே அவன் சிந்திக்கின்றான்.எனவே, உடையணியும் போதும் கூட, அது நல்ல நோக்கத்துக்கு செல்வதற்காக அணியப்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் இருங்கள்.