அவலூர்பேட்டையில் பிரதோஷ வழிபாடு!
ADDED :4164 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை, வளத்தி பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு சுவர்ணாபிஷேகம், பாலாபிஷேகம், தீபாரதனை நடந்தது. நொச்சலூர் திரிபுர சுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பாலாபிஷேகம், தீபாரதனை நடந்தது. வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு மருதீஸ்வரருக்கு பாலாபிஷேகம், தீபாரதனை, சிறப்பு புஷ்ப அலங்காரம் நடந்தது.