விழுப்புரம் கந்த சஷ்டி விழா!
ADDED :4010 days ago
விழுப்புரம்: வளவனூர் குமாரபுரி சுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கந்த சஷ்டி விழா இன்று (23ம் தேதி) துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை கணபதி ஹோமம், விக்னேஸ்வரபூஜை, மகாதீபாராதனை மற் றும் விநாயகர் புறப்பாடும் நடக்கிறது, நாளை (24ம் தேதி) காப்புகட்டுதல், கலசபூஜைகள் நடக்கிறது. மாலை நேரத்தில் சஷ்டி கவச பாராயணம் நடக்கிறது.