அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4199 days ago
விருத்தாசலம்: ஐப்பசி மாத அமாவாசையொட்டி, விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விநாயகர், அங்காள பரமேஸ்வரி, புத்து மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந் தது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு அங்காள பரமேஸ்வரி உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.