உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் 29ம் தேதி சூரசம்ஹாரம்

மயிலம் முருகன் கோவிலில் 29ம் தேதி சூரசம்ஹாரம்

மயிலம்: மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவில் வரும் 29ம் தேதி இரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. துவக்க விழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பகல் 12 மணிக்கு பால சித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மகா தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தினசரி கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். வரும் 29ம் தேதி இரவு 9 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து சூரசம்காரம் நடக்கிறது. கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !