உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை விழா!

அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை விழா!

பொன்னேரி: பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணிய சுவாமிக்கு, 88ம் ஆண்டு, கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா, கடந்த, 24ம் தேதி, துவங்கியது. விழாவை முன்னிட்டு, மூலவர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சந்தனக் காப்பும் நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமான் வள்ளி தேவசேனாவிற்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இம்மாதம், 29ம்தேதி வரை, தினமும் லட்சார்ச்சனையும், 30ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு தேவசேனா திருக்கல்யாண வைபவமும், அன்றைய தினம், இரவு, 9:00 மணிக்கு, திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !