பெருமாள் கோவிலில் உழவாரப் பணி முகாம்!
ADDED :4006 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உழவாரப்பணிக்குழுவினர் துõய்மை பணி மேற்கொண்டனர். புதுச்சேரி, முத லியார்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ உலகளந்தான் பொன்னடியார் மகாசபை உழவாரப் பணிக் குழுவினர், அரங்க பெருமாள் ராமானுஜ சுவாமிகள் தலைமையில் திருக்கோவிலூர் வந்திருந்தனர். உலகளந்த பெருமாள் கோவில் முகப்பில் உள்ள குப்பைகள் மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த புதர்களை துõய்மை படுத்தும் பணியில், இக்குழுவினர் ஈடுபட்டனர். ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன் நடந்த உழவாரப் பணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோவிலை துõய்மைப்படுத்தினர்.