உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

புதுச்சேரி: கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், யானை  வாகனத்தில் சுவாமி வீதியுலா  நடந்தது. சாரத்திலுள்ள வள்ளி தேவசேனா சமேத, சுப்ரமணிய சுவாமி கோவிலின், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா, கடந்த 24ம் ÷ ததி, கொடியேற்றத்துடன் துவங்கியது.  நேற்று முன்தினம் இரவு, தீபாராதனையுடன் சுவாமி சந்திர பிரபையில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து ÷ நற்று மாலை 5:00 மணியளவில் மகா அபிஷேகம், இரவு 7:00 மணியளவில் யாக சாலை பூஜையும், 8:00 மணியளவில் யானை வாகனத்தில் சுவாமி  வீதியுலா நடந்தது. 30ம் தேதி இரவு 7:00 மணியளவில், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் அப் பகுதி இளைஞர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !