உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதட்டூர்பேட்டை கோவிலில் கந்தசஷ்டி உற்சவம்!

பொதட்டூர்பேட்டை கோவிலில் கந்தசஷ்டி உற்சவம்!

பொதட்டூர்பேட்டை: சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா நடந்து வருகிறது. நேற்று, ஆட்டு கிடா வாகனத்தில், உற்சவர் வீதியுலா  எழுந்தருளினார். நாளை மறுதினம், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பொதட்டூர்பேட்டை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி உற்சவம்,  கடந்த 23ம் தேதி கலச ஸ்தாபனத்துடன் துவங்கியது. தினசரி காலையில், சிறப்பு அபிஷேகமும், மாலையில், உற்சவர் வீதியுலாவும் நடந்து வரு கின்றன. நேற்று, ஆட்டுக்கிடா வாகனத்தில், உற்சவர் எழுந்தருளினார். நாளை மறுதினம், மாலை, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற  உள்ளது. வியாழக்கிழமை தேர் திருவிழா நடக்கிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சனிக்கிழமை அன்ன வாகன  உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. சஷ்டியை ஒட்டி, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !