உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம்!
புதுச்சேரி: கிருஷ்ணப்ரேமிக பஜனை மண்டலி சார்பில், சாரதாம்பாள் கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம் நடந்தது. கும்பகோணம் அடுத்த திருவிசலுார் ஸ்ரீதர அய்யவாள் கங்காவதரண மகோற்சவம் வரும் நவம்பர் 13ம் தேதி துவங்கி, வரும் 22ம் தேதி வரை பஜனை, சங்கீத கச்சேரிகளுடன் நடக்கிறது. கங்காவதரண உற்சவத்தை முன்னிட்டு, கிருஷ்ணப்ரேமிக பஜனை மண்டலி சார்பில், புதுச்சேரியில் நேற்று நான்கு இடங்களில், உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம் நடந்தது. ரெயின்போ நகர் சுமுக விநாயகர் கோவிலில் காலை 7:15 மணி முதல் 8:00 வரையிலும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் காலை 8:15 மணி முதல் 9:00 வரை, காலை 9:15 மணி முதல் 10:15 வரை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலிலும், காலை 10:30 மணி முதல் 12:30 வரை எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது. ஸ்ரீ பிருத்த கிரிபாகவதர் தலைமையில் உஞ்சவ்ருத்தி நாம சங்கீத்தனம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கிருஷ்ணப்ரேமிக பஜனை மண்டலியினர் செய்திருந்தனர்.