திருச்செந்தூரில் வெற்றித் திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்.29ல் சூரசம்ஹாரத் திருவிழா கோலாகலமாக நடப்பதை ஒட்டி, அங்கேசெல்பவர்களுக்கு வசதியாக பலதகவல்களைத் தந்துள்ளோம்.முருகன் தலங்களில் திருச்செந்துõர் இரண்டாம் படைவீடாகத் திகழ்கிறது. மனித உடம்பில் உள்ளஆறு ஆதாரங்களின்அடிப்படையில், அதற்குரிய ஆறு தலங்களை யோகிகள் உருவாக்கி அமைத்தனர். அதில் திருச்செந்துõர் இரண்டாவதாகத் திகழ்கிறது. திருமுருகாற்றுப்படை என்னும் நுõலில் நக்கீரர் திருச்சீரலைவாய் என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறார். அரசன் படைகளோடு தங்குமிடமே படைவீடு என்பர். அந்த வகையில் முருகன் சூரசம்ஹாரம் நிகழ்த்துவதற்காக படையோடு தங்கிய தலம் இது. ஜெயம் என்பதற்கு வெற்றி என்பது பொருள். போர் நிகழ்த்திய முருகன் இங்கு வெற்றி பெற்றதால் திருச்செந்துõருக்குஜெயந்திபுரம் என்று பெயர் இருந்தது. இத்தலத்தின் சிறப்பைக் கூறும்ஜெயந்திபுர மகாத்மியம் என்று ஒரு நுõல் உள்ளது.
சந்தன மலை: திருச்செந்துõர் வட்டாரப் பகுதியில் வழங்கப்படும் நாடோடிப்பாடலில் சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன் என்னும் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் வீற்றிருக்கும் இப்பகுதிக்கு சந்தன மலை என்றும் பெயர் இருக்கிறது. 15ம் நுõற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் திருப்புகழில், சந்தனப் பைம்பொழில் தண் செந்தில் என்று சந்தன சோலையாக திருச்செந்துõர் இருந்ததைக் குறிப்பிடுகிறார். தற்போது சந்தனமரம் எதுவும் இல்லை. இங்கு வழங்கப்படும் பிரசாதத்தில் திருநீறு அளவுக்கு சந்தனத்திற்கும் மிகுந்தமுக்கியத்துவம் உண்டு.