வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம்!
ADDED :4002 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் 17ம் ஆண்டு திருபவித்ரோத்சவம் வரும் 4ம் தேதி துவங்குகிறது. விழுப்புரம் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வைகுண்ட வாசப்பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம், வரும் 4ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு உபயதாரர்கள் சங்கல்பம், அனுக்ஞை ஆச்சார்யவர்ணம், பகவத் அனுக்ரகம், வாஸ்து சாந்தி மற்றும் பவித்ர ஆராதனம் நடக்கிறது. இதனை தொடர்ந்து 5ம் தேதி காலை புண்யாஹவாசனம், பவித்ர பிரதிஷ்டை, பவித்ரம் சாற்றுதல், யாகசாலை ஹோமம் ஆரம்பம், பூர்ணாஹூதி, சாற்றுமுறையும், மாலை 6:00 மணிக்கு ஹோமங்கள், பூர்ணாஹூதி, சாற்றுமுறையும் நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை பிரதான ஹோமம், விஷேச திருமஞ்சனம், கும்ப ஆவாஹனமும், மாலை சுவாமி சன்னதி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.