விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு!
ADDED :4367 days ago
விருத்தாசலம்: சஷ்டி திருவிழாவையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குமரேச சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், 28 ஆகம சன்னதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத குமரேச சுவாமிக்கு சஷ்டி திருவிழா கடந்த 24ம் தேதி துவ ங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நான்காம் நாள் நிகழ்ச்சிய õக, குமரேச சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் குமரேச சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.