உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் மணவாள மாமுனிக்கு சிறப்பு திருமஞ்சனம்!

கடலூர் மணவாள மாமுனிக்கு சிறப்பு திருமஞ்சனம்!

கடலூர்: ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருமூல நட்சத்திர பிறந்த நாளையொட்டி சிறப்பு திருமஞ்சனம்  நடந்தது. ஸ்ரீமணவாள மாமுனிகள் அவதரித்த  ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு  ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப்பெருமாளுக்கும், ஸ்ரீமத்மணவாள மாமுனிகளுக்கும், சிறப்பு தி ருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு ஸ்ரீமத்மணவாளமாமுனிகள் சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன் நாயுடு  குடும்பத்தினர்,  செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் கோவிந்தசாமி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !