சென்ன பிரசன்ன பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
ADDED :4003 days ago
சென்னை: சேனையாழ்வார் அவதரித்த திருநாளை முன்னிட்டு, சென்னை பூக்கடை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள, சென்ன பிரசன்ன பெருமாள் கோவிலில் சேனையாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதையடுத்து, நாச்சியார்கள் சமேதராய் அருள்பாலிக்கும் சென்ன பிரசன்ன பெருமாளுக்கும், சேனையாழ்வாருக்கும் தீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.