திருமலைக்கேணி கோயிலில் கந்தசஷ்டி விழா!
சாணார்பட்டி : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமிக் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. சாணார்பட்டி திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிக் கோயிலில் கந்த சஷ்டி விழா அக். 24ல் துவங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். நேற்று காலை கந்த சஷ்டி கவசப்பாராயணத்துடன் கிரிவலம், திரு முருகாற் றுப்படை செந்தமிழ் வேள்வி யும், கந்தசஷ்டி மகா அபி ஷேகம் கலச நீராட்டும், செந்தமிழால் முருகப்பெருமா னுக்கு நூறாயிம் போற்றி மற்றும் தீபராதனை நடந்தது. நேற்று மாலை 4.30மணிக்கு முருக பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் காட்சி நடந்தது. ஒப்ப ந்தகாரர் வெள்ளைச்சாமி,ஊராட்சித்தலைவர்மீனாள், வர்த்தக பிரமுகர் சோமசுந்தரம் தழிழரசி ஆகியோர் துவக்கி வைத்தனர். அன்னதானம் நடந்தது. இதனை தொடர்ந்து 6.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி காட்சி நடந்தது. இன்று காலை 10.30 முதல் 12 மணி வரை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் வேல் முருகன், பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம்லிங் 1ம் செய்திருந்தனர்.