உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

சீனிவாச பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

கடம்பத்துார்: கடம்பத்துாரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா, நேற்று நடந்தது. கடம்பத்துாரில் உள்ள, 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், 60 ஆண்டுகளுக்கு பின், கடந்த செப்., 11ம் தேதி, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.அதன்பின், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேக நிறைவு நாளான, நேற்று காலை, கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. அதன்பின், இரவு 7:00 மணிக்கு, மண்டலாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின், இரவு 8:00 மணிக்கு, சுவாமி மலர் அலங்காரத்தில், வீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !