வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா
ராசிபுரம் : ராசிபுரம் அடுத்த, பள்ளிப்பட்டி வைத்தீஸ்வரன் கோவிலில், இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. பேளுக்குறிச்சி அருகே பள்ளிப்பட்டியில், ராஜகணபதி, வைத்தீஸ்வரன், தையல்நாயகி, பாலமுருகன், நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஸ்வாமிக்கான கோவிலின் திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா நடக்கிறது.நேற்று காலை, 9 மணிக்கு, காவிரி தீர்த்தம் அழைத்தல், கணபதி பூஜை முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பூஜையும், மாலை, 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், யாக வேள்வி, வாஸ்து சாந்தி, கோபுர கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 9 மணிக்கு, கோபுர கலசம் மற்றும் மூலவர் உள்ளிட்ட பரிவார தேவதைக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாவுரெட்டிப்பட்டி குமார சுப்பிரமணிய சுவாமி கோவிலின் சிவ ஸ்ரீ ரவி சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்து வைக்கிறார்.