பகவதி அம்மன் அன்னதான உணடியல் மூலம் ரூ.22 ஆயிரம் வசூல்!
ADDED :4003 days ago
நாகர்கோவில்: உலக புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. . இந்த உண்டியல் மாதந்தோறும் இறுதியில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அது போல இந்த மாதத்திற்கான அன்னதான உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இந்து அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சாரதா, கோவில் தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.21ஆயிரத்து 868 வசூல் ஆனது.