திருமூலநாதர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா!
ADDED :3999 days ago
தென்கரை : சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன் திருமூலநாதர் சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் சூரனை வதம் செய்ய, பராசக்தியிடம் சுவாமி முருகன் வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அன்னப்பாவாடை தரிசன நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.