நல்லாத்தூர் பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நாளை துவங்குகிறது!
ADDED :3999 days ago
புதுச்சேரி: நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவம் நாளை துவங்குகிறது. ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில், ௧௬ம் ஆண்டு பவித்ர உற்சவம் நாளை ௧ம் தேதி துவங்கி, 3ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி, நவ.௧ம் தேதியன்று காலை 6.00 மணிக்கு எஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி, பவித்ர பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2ம் தேதி காலை 7.00 மணிக்கு, கலச ஸ்தாபனம், பவித்ர சமர்ப்பணம், ஹோமமும், மாலை 6.00 மணிக்கு, புண்ணியாகம், யாகம் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 6.00 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம், புண்ணியாகம், அக்னி பிரணயனம், ஹோமம் , கடம் புறப்பாடு, சாற்றுமுறை செய்து, பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாத வினியோகம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.