தஞ்சை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :3998 days ago
தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பூக்காரத் தெருவில் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்கினர். மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.