கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :3998 days ago
நகரி: நகரி டவுனில் உள்ள கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. சித்துார் மாவட்டம், நகரி டவுனில், காமாட்சி சமேத கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சன்னி தியில், கடந்த, 24ம் தேதி முதல், கந்த சஷ்டி உற்சவம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, இரவு 7:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.