உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணபதி கோவிலில் சூரசம்ஹார உற்சவம்

கணபதி கோவிலில் சூரசம்ஹார உற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள அமிர்த கணபதி கோவிலில் சூரசம்ஹார சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. விழுப்புரம், கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள அமிர்த கணபதி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. தினம் மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் திருமஞ்சனம் நடந்தது. ஆறாம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு சூரசம்ஹார உற்சவம், இரவு 7:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வெற்றி மாலை அணிவித்து சிறப்பு பூஜையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சுப்பரமணியம் செய்திருந்தார். ஆலய அர்ச்சகர் கார்த்திக் சிறப்பு பூஜைகள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !