மந்த்ராலயம் பக்தி பயண ஆலோசனை
ADDED :3998 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ப்தகரி பஜனா மண்டலி 9ம் ஆண்டு மந்த்ராலய பக்தி பயண ஆலோசனை கூட்டம் நடந்தது. விழுப்புரம் பாண்டுரங்க பீடத்தில் நடந்த கூட்டத்திற்கு அறக்கட்டளை தலைவர் தொல்காப்பியரங்க தாஸ் தலைமை தாங்கினார். தட்சணாமூர்த்தி, செல்வராஜ், சங்கர், ருத்ரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 2015ம் ஆண்டின் பயணக்குழு தலைவராக கலியபெருமாள் தேர்வு செய்யப்பட்டார். பிப்., மாதம் நடக்கும் பக்தி பயணத்தில் 1000 பக்தர்கள் பங்கேற்பது. மந்த்ராலயத்தில் ஹோமம், பஜனை, பிராமண சேவா, சுமங்கலி விளக்கு பூஜை, பீடாதிபதி ஆசீர்வாதம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.