சஷ்டி விரதம் இன்று நிறைவு
ADDED :3997 days ago
ஆர்.கே.பேட்டை: ஒரு வாரகாலமாக மேற்கொண்டிருந்த சஷ்டி விரதம், இன்று நிறைவு பெறுகிறது. நேற்று, சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, பொதட்டூர்பேட்டை ஆறுமுகசாமி மலையடிவாரம், வங்கனுார் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகப்பெருமான் தலங்களில், சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை ஆறுமுகசுவாமி கோவில், மாலையில் அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில்களில், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.பொதட்டூர்பேட்டை சுப்ரமணியசுவாமி கோவிலில், நேற்று, தேர் திருவிழாவும், இன்று காலை திருக்கல்யாண நிகழ்ச்சியும், நடைபெறுகிறது.