கூடலூர் சூரசம்ஹார விழாவில் சிறப்பு அலங்காரம்
ADDED :3997 days ago
கூடலூர் : கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சூரசம்ஹாரம் மற்றும் முருகன் திருகல்யாணம் விழா ஆகியவை, கடந்த 24ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:45 மணிக்கு சிறப்பு கும்பபூஜை, யாகபூஜை நடந்தன. காலை 10:30 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அலகாரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகனை தரிசித்தனர். மாலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8:45 மணிக்கு சிறப்பு பூஜை, யாக பூஜையும்; 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, முருகன் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சக்தி விநாயகர் கோவில் அறகட்டளை செய்திருந்தனர்.