உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. கந்தசஷ்டி விழா அக்.24 ல் துவங்கி தினசரி முருகனுக்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. நேற்றுமுன்தினம் காலை சண்முகா அர்ச்சனை, மாலை சூரசம்ஹாரம் நடந்தது.நேற்று காலை 10 மணிக்கு திருமுருகன் திருப்பேரவை மண்டபத்திலிருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து முருகன் சன்னதிக்கு வந்தனர். அங்கு பாஸ்கர சிவாச்சாரியார் தலைமையில் அக்னி வளர்க்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நிறைவேறியது.அன்னதானத்தை தொடர்ந்து சஷ்டிவிழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !