திருவாண்டார்கோவிலில் சூரசம்ஹார விழா!
ADDED :4191 days ago
திருபுவனை: திருவாண்டார்கோவில் பாலமுருகன் கோவிலில், 20ம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது.இதனை முன்னிட்டு, காலை 9.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு, சூரசம்ஹார விழா நடந்தது. இதில், முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் முருகர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.