ஆனந்த விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3997 days ago
காரைக்கால்: காரைக்கால் நேருநகர் ஆனந்த விநாயகர் கோவி லில், சுப்ரமணியர் சுவாமி, வள்ளிநாயகி,தேவசேனா ஆகியோர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஐப்பசி மாதத்தை முன்னிட்டு, ஆனந்த விநாயகர் ஆலய மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியையொட்டி, சுப்ரமணியர் மற்றும் வள்ளிநாயகி,தேவசேனா ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சீர்வரிசை வழங்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை ஆனந்த விநாயகர் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.