காரிமங்கலம் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3998 days ago
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, ஏரியின்கீழுரில், புதிதாக கட்டப்பட்ட கற்பக கணபதி, மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. காரிமங்கலம் அடுத்த ஏரியின்கீழுாரில், மஹா சக்தி மாரியம்மன் கோவில், கற்பக கணபதி கோவில் புதிதாக கட்டப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த, 29ம் தேதி கணபதி ஹோமம், லக்ஷ்மி பூஜை, கங்கை பூஜை, கோ பூஜை முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் கணபதி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, காயத்திரி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. காலை, 8 மணிக்கு மேல், 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. காரிமங்கலம் நஞ்சுண்ட பட்டாச்சாரியர், கரவர்த்தி பட்டாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.