சேத்தியாத்தோப்பு, கோவிலில் பாலாலயம்!
ADDED :3998 days ago
சேத்தியாத்தோப்பு வரசித்தி விநாயகர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது.சேத்தியாத்தோப்பு கடை வீதியில் பழமையான வரசித்தி விநாயகர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிக்குழு முடிவு செய்தது.அதனையொட்டி நேற்று பகல் 12.00 மணிக்கு பாலாலயம் செய்யும் பொருட்டு கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், ஐஸ்வர்ய ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் பூர்ணாகுதியை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.