வரதராஜ பெருமாளுக்கு திருபவித்ரோத்ஸவம்
ADDED :3996 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் ஸ்ரீலட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் 12ம் ஆண்டு திருபவித்ரோத்ஸவம் நடந்தது. விழாவை யொட்டி நேற்று காலை 7:00 மணி முதல் சதுஷ்ஸ்தான பூஜை, சாந்தி ஹோமம், மகா பூர்ணாஹூதி, பெருமாளுக்கு மண்டல பிரசாதம் சமர்பித்தல் நடந்தது. தொடர்ந்து பவித்ர விஸர்ஜனம், ஆசார்ய மரியாதை ஸ்தபன திருமஞ்சனம், கும்ப புறப் பாடு, யாத்ரா தானம், மகா கும்ப ப்ரோஷணம், திருவாராதனம், வேத பிரபந்த சாற்றுமுறை நடந்தது. பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் நியோகிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கைங்கர்ய அறகட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.