சோமநாதர் கோவில் குருபூஜை!
ADDED :3997 days ago
பண்ருட்டி: பண்ருட்டி சோமநாத கோவிலில் உள்ள மனவாசங்கடந்த மாமுனிவருக்கு குருபூஜை விழா நேற்று நடந்தது. பண்ருட்டி சோமநாதசுவாமி கோவிலில் மனவாசங்கடந்த மாமுனிவரின் குரு பூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவர் சோமநாதசுவாமிக்கும், மனவாசங்கடந்த மாமுனிவருக்கு சதய நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மதியம் 1:00 மணியளவில் மகேஸ்வர பூஜையும் , நெய்வேலி ஞானி அவர்களின் மெய்காட்டும் மெய்யன்பர் என்கிற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும் நடந்தது.