உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரைகள் சேதமடைந்த கலிங்க நாதேஸ்வரர் குளம்!

கரைகள் சேதமடைந்த கலிங்க நாதேஸ்வரர் குளம்!

இருளஞ்சேரி: இருளஞ்சேரியில் உள்ள கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளத்தின் கரைகளை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை  விடுத்து உள்ளனர். பேரம்பாக்கம் அடுத்துள்ளது, இருளஞ்சேரி. இங்கு, 1,500 ஆண்டுகள் பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட அன்னை  தாயினும் நல்லாள் காமாட்சி உடனுறை கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது.  இதன் எதிரே, கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்து நீரை கொண்டு தான், சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து வந்தது. நாளடைவில் இந்த குளத்தின் கரைகள் சேதமடைந்ததால்,  குளத்தை சுற்றிலும் முட்செடிகள், கொடிகள் படர்ந்துள்ளன. மேலும், பகுதிவாசிகள்,  குளத்து நீரில் துணி துவைப்பதால், கோவிலில் நடைபெறும் அபிஷேகத்திற்கு இந்நீரை பயன்படுத்த முடிவதில்லை. கோவில் குளத்தை சீரமைப்பது  குறித்து, அறநிலைய துறைக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும்,  கோவில்  குளத்தை சீரமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, சுற்றுப்பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோவில் குளத்தை சீரமைக்க, அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !