உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்கள் சுவாமி சிலைகளுக்கு நாளை கும்பாபிஷேகம்!

சித்தர்கள் சுவாமி சிலைகளுக்கு நாளை கும்பாபிஷேகம்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, சற்குரு சித்தர் சுவாமி சிலை, ஓங்காரநந்தா சித்தர் சுவாமி சிலைகளுக்கு   நாளை 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் புற்றுமாரியம்மன் கோவில் வளாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர்   சிலை, சற்குரு சித்தர் சிலை, பரங்கிப்பேட்டையில் வாழ்ந்த அனுமான் சுவாமி என்று அழைக்கப்படும் ஓங்காரநந்தா சித்தர் சுவாமி சிலைகள் பி  ரதிஷ்டை செய்யப்பட்டு நாளை 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி இன்று 3ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை,  விக்÷  னஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம்,  நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் அங்குரார்பணம், ரஷாபந்  தனம், கோ பூஜை, முதல்கால யாக பூஜை, ஜெபபாராயணம், ஷண்ணவதிஹோமம், மகாபூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. நாளை 4ம் தேதி   அதிகாலை 3:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஜெபபாராயணம் ஷண்ணவதி ஹோமம், சாந்தி ஹோமம், மகா பூர்ணாஹூதி, 5:30 மணிக்கு   யாத்ராதானம், கடம்புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து துறவிகள் நம் பாரத தேசத்தை வாழ வைக்கும் பாதுகாவலர்கள் என்ற   தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரம சீடர்கள் லட்சுமிபாய், கோடீஸ்வரானந்தா, சீனு என்கிற ராமதாஸ் ஆகியோர்   செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !