கள்ளக்குறிச்சியில் கும்பாபிஷேக விழா!
ADDED :3997 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை 8:40 மணிக்கு நடந்தது. இதற்கான சிறப்பு பூஜைகள் கடந்த 30ம் தேதி துவங்கி, தினம் காலை மாலை என நான்கு கால பூஜைகளாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சூரிய சந்திர வழிபாடு, துவார பூஜை, மூலமந்திர ஹோமம், நாடி சந்தானம் மற்றும் மஹா பூர்ணாகுதி நடந்தது. காலை 8:30 மணிக்கு கலச புறப்பாடு நடத்தி, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோவில் விமானத்திற்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., நகர செ யலாளர் பாபு, துணை செயலாளர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.