உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!

பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!

மடத்துக்குளம் : கடத்துார் கொக்கரக்கல்வலசு பகவதி அம்மன், காமாட்சி அம்மன், மதுரை வீரன் கோவில்களில் நேற்று காலை கும்பாபிேஷகம் நடந்தது. மடத்துக்குளம் அருகே கடத்துார் கொக்கரக்கல்வலசில் பகவதி அம்மன், காமாட்சி அம்மன், மதுரை வீரன் கோவில்களில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பழமையாகவும், சிறிய அளவிலும் இருந்த கோவில்களை புதுப்பிக்க பொதுமக்கள் தீர்மானித்தனர். இதற்காக குழுஅமைத்து திருப்பணிகள் நடந்தது.கோவில்கள் கட்டுமானபணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிேஷகம் ஏற்பாடுகள் தொடங்கின. நேற்றுமுன்தினம் மாலை 3.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நாடிசந்தனம் நிகழ்ச்சிகளும், 9.50 மணிக்கு கும்பாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !