உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்!

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்!

பரமக்குடி : பரமக்குடி காக்காதோப்பு சோலையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி அக்., 31 ல், மாலை 5 மணிக்கு நூதன ஆஞ்சநேயர் மூலவர் திருமேனி, முக்கிய வீதிகளில் வலம் வந்தார். நவ., 1 ல், காலை 10.30 மணிக்கு சுதர்சன ஹோமம், மாலை 5 மணிக்கு அனுக்கை, வாஸ்துசாந்தி, முதல்காலயாக பூஜை தொடங்கியது. இரவு 8 மணிக்கு மகாபூர்ணாகுதியும், 9 மணிக்கு மேல் ஆஞ்சநேயர், விநாயகர், நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையைத் தொடர்ந்து, தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகின. காலை 8.30 மணிக்கு விமானம், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !