உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 6ம் தேதி பொங்கல்

சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 6ம் தேதி பொங்கல்

சென்னிமலை : சென்னிமலை காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 15ம் நாள் பொங்கல் விழா நடைபெறும். இந்தாண்டு பொங்கல் விழா, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 29ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர், பால் ஊற்றியும், வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்துகின்றனர். பக்தர்கள் பலர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திகடனை செலுத்துகின்றனர்.வரும் ஐந்தாம் தேதி மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜை நடக்கிறது. ஆறாம் தேதி பொங்கல் விழா நடக்கிறது.ஏழாம் தேதி, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. அன்றுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !